மாசு கலந்த நீர்... மூளை நோய்க்குக் காரணம்!#WhereIsMyWater | Burning water ... cause brain disease

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (06/06/2019)

கடைசி தொடர்பு:19:15 (06/06/2019)

மாசு கலந்த நீர்... மூளை நோய்க்குக் காரணம்!#WhereIsMyWater

தமிழகத்தில் ஆறுகள், கிணறுகள் மூலமாக நீரைப் பெற்றுக்கொண்டாலும் தற்போதைய காலகட்டத்தில் அவை சுத்தமானதாக இருக்கிறதா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. பல்வேறு நகரங்களுக்கும் கேன் தண்ணீர்தான் சுத்தமான நீர். இதனால், பலரும் கேன் தண்ணீரை மட்டுமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். மற்ற தேவைகளுக்காகக் குழாய் நீரையோ அல்லது லாரி நீரையோ பயன்படுத்துகின்றனர். 

லாரித் தண்ணீர்

சமீபகாலமாக தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், பலருக்கும் லாரி நீரும், குழாய் நீரும்தான் தற்போது குடிநீரே. அந்த நீர் சுத்தமானதா, தரமானதாக இருக்கிறதா என்றால் அது கேள்விக் குறிதான். பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கும் மாவட்டங்களில் கிடைக்கும் தண்ணீரில் அதிகளவில் நச்சுப் பொருள்கள் கலந்துள்ளதால், அதைக் குடித்தவர்களுக்கு வாந்தி, பேதி எனப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது மட்டுமன்றி பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளும் நீரில் கலக்கின்றன.

நீர்

இது போன்ற மாசு கலந்த நீரைக் குடிப்பதால் மூளை நோய், நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், நரம்பு பாதிப்பு உடல் வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்புகளும், முடி உதிர்தல், தோலில் புண் உண்டாதல், தோல் நிற மாற்றம் போன்ற பாதிப்புகளும் வருகின்றன. அதேபோல், நுரையீரல் பாதிப்பு போன்றவையும், இதயம் தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன. இது மட்டுமன்றி பல்வேறு விதமான நோய்களுக்கு மாசு கலந்த நீர் முக்கிய காரணமாக இருக்கிறது.  

மாசு நீர்

குப்பைகள் கொட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது, சாயம் போகும் துணிகளை ஆற்றில் துவைப்பது என நம்முடைய நீர் ஆதாரங்களை நாமே மாசுபடுத்தாமல் சுத்தமாக வைத்தால் மாசு நீரைத் தடுக்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க