`அ.தி.மு.க ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை!' - கனிமொழி | DMK MP Kanimozhi slams TN Government over encroachment

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (06/06/2019)

கடைசி தொடர்பு:20:00 (06/06/2019)

`அ.தி.மு.க ஆட்சியில் ஏரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை!' - கனிமொழி

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற எம்.பி-க்களில் அமைச்சரானவர்கள் அனைவரும் பதவியேற்றுவிட்டனர். தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் இருந்தபடி வெளியாகும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிரடியாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுவதாக அந்த ட்விட்டர் வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

கனிமொழி

அந்தப் பதிவில், `அ.தி.மு.க ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல, ஏரிகளுக்கும்கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது. சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கப்பட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

கனிமொழி

அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தை, தங்கள் அரசியல் பணிக்காக  தேர்தல் சமயங்களில் பயன்படுத்தி வந்தனர். ஐ.டி விங்கை இறக்கிவிட்டு மீம்ஸ், இன்ட்ராக்சன் என வித்தியாசமான பிரசார உத்திகளைக் கையாண்டனர். தேர்தலுக்குப் பிறகும் அதைக் கையிலெடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.