``தஞ்சாவூர்ல 50 குளங்களைக் காணோம் சார்!” - கோட்டாட்சியரை அதிரவைத்த சமூக ஆர்வலர் | 50 ponds in the Thanjavur was missing

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (07/06/2019)

கடைசி தொடர்பு:11:15 (07/06/2019)

``தஞ்சாவூர்ல 50 குளங்களைக் காணோம் சார்!” - கோட்டாட்சியரை அதிரவைத்த சமூக ஆர்வலர்

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, கிணறு காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுப்பார். அது, காமெடி காட்சி. அதே பாணியில் தஞ்சாவூரில் ஒரு வேதனைக் காட்சி. தஞ்சை மாநகருக்குள் இருந்த 50 குளங்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவற்றை உடனடியாக மீட்க வேண்டும் எனவும், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விமலநாதன், கோட்டாட்சியரிடம் மனு அளித்து தஞ்சை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வரலாற்றுப் புகழ்மிக்க தஞ்சை மாநகரில், தற்போது உள்ள சிவகங்கைக் குளம், அய்யன்குளம், சாமந்தன் குளம் உள்ளிட்ட ஒருசில சமூக ஆர்வலர் சுந்தர விமலநாதன்குளங்கள் மட்டுமே இங்குள்ள மக்களுக்குத் தெரியும். நீர் மேலாண்மையில் இந்த அளவுக்கு அக்கறை காட்டிய மன்னர்களை தஞ்சை மக்கள் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வதுண்டு. இந்நிலையில்தான், இங்குள்ள பெரும்பாலான மக்கள் அறிந்திடாத, 50 குளங்கள் குறித்தும் அவை காணாமல் போனது குறித்தும் தஞ்சை கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தின் தலைவர், சுவாமிமலை சுந்தர விமலநாதன். ’’தஞ்சை மாநகர எல்லைக்கு உட்பட்ட வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், வடவாறு ஆகிய ஆறுகளுக்கு இடையே அழகி குளம், கருணசாமி குளம், குஜ்ஜினி குளம் , மரக்கான் குளம், பிக்காஸ், குட்டைக் குளம், வெள்ளைக்காரன் குளம், முனுசாமி பிள்ளை குளம், அல்லிக்குளம் உள்ளிட்ட 50 குளங்கள் பயன்பாட்டில் இருந்தன. இவைகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளால், மாயமாகியுள்ளன. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை முறையாக அளவீடு செய்து, மீட்டெடுத்துத் தூர் வார வேண்டும். இக்குளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டால், ஆண்டு முழுவதும் பயன்படுவதோடு, கோடைக்காலங்களில் நிலத்தடி வற்றாமல் இருக்கும்” என்கிறார்.