இரண்டாவது முறை பிரதமரான பின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி - கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி | PM Modi to offer prayers at Kerala temple

வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (08/06/2019)

கடைசி தொடர்பு:07:22 (08/06/2019)

இரண்டாவது முறை பிரதமரான பின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி - கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு கேரள மாநிலம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

பிரதமர் மோடி

இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக நேற்று இரவு 11.50 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்துக்கு வந்தடைந்தார். பிரதமரை கேரள கவர்னர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், நடிகர் சுரேஷ்கோபி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நள்ளிரவு 12.05 மணிக்கு எர்ணாகுளம் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த பிரதமர் இன்று காலை 8.55 மணிக்குக் கப்பற்படை விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து 9.15 மணியளவில் ஹெலிகாப்டரில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்கிறார்.

பிரதமர் மோடி​​​​​​​

அங்குச் சாமிதரிசனம் நடத்திவிட்டு, காலை 11.30 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூல் கிரவுண்டில் நடக்கும் பி.ஜே.பி. பொதுக்கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். அதன் பின்னர் கொச்சி விமான நிலையம் சென்று மதியம் இரண்டு மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி கேரளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.


அதிகம் படித்தவை