‘தமிழக பா.ஜ.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்’ - கலங்கும் பொன்.ராதாகிருஷ்ணன் | I responsible for failure of the TN BJP says Pon Radhakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (08/06/2019)

கடைசி தொடர்பு:07:40 (08/06/2019)

‘தமிழக பா.ஜ.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்’ - கலங்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

”தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்காததே காரணம். தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்.” என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த பொன் ராதாகிருஷ்ணன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தி.மு.க., கடந்த 1967-ம் ஆண்டிலிருந்தே பொய் வாக்குறுதிகளைக் கூறியே வெற்றி பெறுகிறது. அவர்களது பொய் வாக்குறுதிகளை நம்பி மக்களும் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். தற்போது கூட தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருகிறோம்,  கல்விக்கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்பது போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்துதான் வெற்றி பெற்றுள்ளனர். ஏமாறுவதில் தமிழக மக்கள்தான் இந்தியாவிலேயே முன்னோடியாக உள்ளனர். தற்போது தமிழகத்தில் வெற்றி பெற்ற தி.மு.க., காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை  அவர்களது சொந்தப் பணத்தில் இருந்து நிறைவேற்றுவார்களா?

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க தோற்கவில்லை. அங்கே மதவாதம்தான் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்திற்கு, பிரதமர் மோடி கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.5 லட்சம் கோடி அளவிலான திட்டங்களை தந்துள்ளார். தற்போதும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அவர் பார்க்கப் போவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சராக உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.கவின் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்க்காததே காரணம். தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்.

வேலை நிமித்தமாக மட்டுமே பயன்படும் ஆங்கிலத்தைக் கற்கும் போது, நமது இந்திய மொழியான இந்தியை ஏன் கற்கக்கூடாது. கேரளம்,  கர்நாடகம்,  ஆந்திரத்தில் இந்தியை ஏற்றுக்கொண்ட போதும் அந்த மாநிலத்தவர்களுடைய தாய்மொழி அழிந்துள்ளதா? அதே வேளையில் தமிழகத்தில் இந்தியை அழித்த போதும் தமிழ் மொழி வளர்ந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா? கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நான் டெல்லியில் இந்தி கற்றவர்களிடமே அவர்களும் கற்றனர். அவர்களது கல்வி நிறுவனங்களிலும் இந்தியைக் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், ஏழை மாணவர்களை மட்டும் ஏன் எதிர்க்கின்றனர்.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க