``நாங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை; அ.தி.மு.க ஆட்சி தானாக கலையும்” - ஆ.ராசா | Aiadmk regime will be removed by himself says raja

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:10:26 (09/06/2019)

``நாங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை; அ.தி.மு.க ஆட்சி தானாக கலையும்” - ஆ.ராசா

``எங்களின் அனுமானம் சரியென்றால் அ.தி.மு.க ஆட்சியை நாங்கள் கலைக்கத் தேவையில்லை. அதுவே 2 மாதங்களில் தானாக கலைந்துவிடும்” என்று ஊட்டியில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

ராசா

கூடலூர், ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி (தனி)  நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிட்ட ஆ.ராசா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை வீழ்த்தி  வெற்றி பெற்றார். மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க நீலகிரி மாவட்டம் வந்தார். நீலகிரியில்  இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற ஆ.ராசாவை கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.

ஆ.ராசா

ஊட்டி ஏ.டி.சி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது,  ``நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமராக காரணமாக அமைந்தது அவரது சாதனைகள் அல்ல. தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் சரியான கூட்டணி அமைக்காததே முக்கிய காரணம். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என முடிவெடுத்து முன்மொழிந்து முற்போக்கு கூட்டணியை உருவாக்கினார். ஆனால் மம்தா, அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் தங்கள் மாநிலங்களில் கூட்டணி  அமைக்காமல் போட்டியிட்டது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

நீலகிரி

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமையை ஏற்க மாட்டோம் என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மதுரையில் பேசியுள்ளது கட்சிக்குள் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் அனுமானம் சரியென்றால் இன்னும் இரண்டு மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி கலையும், நாங்கள் கலைக்கத் தேவையில்லை. இரண்டு மாதத்தில் தி.மு.க ஆட்சி அமைத்ததும் முதல் கையொழுத்தே கல்விக் கடன் மற்றும்  விவசாயக் கடன்களை ஸ்டாலின் ரத்து செய்து அறிவிப்பார்" என்றார்.