`எத்தனை பி.ஜே.பி எம்.பி-க்கள் இருந்தாலும்...!' - வயநாடு மக்களிடம் உறுதியளித்த ராகுல்காந்தி | Rahul gandhi speech in Kozhikode

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:15:00 (09/06/2019)

`எத்தனை பி.ஜே.பி எம்.பி-க்கள் இருந்தாலும்...!' - வயநாடு மக்களிடம் உறுதியளித்த ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் எத்தனை பி.ஜே.பி எம்.பி-க்கள் இருந்தாலும், உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ராகுல்காந்தி

வயநாட்டில் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல்காந்தி கேரளா வந்துள்ளார். மூன்றாவது நாளான இன்று,  ராகுல் காந்தி கோழிக்கோடு மாவட்டம் எங்கபுழா பகுதியில் பேரணியாக வந்து, மக்களிடம் நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர்,
``என் மீது நீங்கள் அதீத அன்பு வைத்துள்ளதற்கு எனது இதயபூர்வமான நன்றி. நன்றி தெரிவிப்பதோடு நிற்காமல், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன். வயநாடு தொகுதிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நான் செய்வேன். 
நேற்று கம்யூனிட்ஸ்ட் எம்.எல்.ஏ ஒருவர் என்னை சந்தித்தார். உங்களது பிரச்னைகளை எம்.எல்.ஏ-க்கள் உதவியோடு, முதல்வரிடம் எடுத்துச் சென்று தீர்வு காண்பேன். நாடாளுமன்றத்தில் எத்தனை பி.ஜே.பி எம்.பி-க்கள்  இருந்தாலும், உங்களுக்காக என்னுடைய குரல் வலுவாக ஒலிக்கும். 

ராகுல்காந்தி

காங்கிரஸ் ஆண்டாலும், கம்யூனிஸ்ட் ஆண்டாலும் பிரதமர் மோடி, கேரளாவைக் கண்டுகொள்ளமாட்டார். மோடி, உத்தரப்பிரதேசத்தைப் பார்ப்பதுபோல கேரளாவைப் பார்க்க மாட்டார். கேரளா வித்தியாசமான மாநிலம். கேரள மக்களின் அரசியல் பார்வையும் வித்தியாமானது. தங்களை யார் ஆள வேண்டும் என்பதை கேரள மக்கள்தான் முடிவு செய்வார்கள்' என்று பேசினார்.

ராகுல்காந்தி

தனது பேச்சை முடிக்கும்போது, ராகுல்காந்தி `நன்னி'(நன்றி) என்று மலையாளத்தில் பேசினார். அப்போது, மக்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், ராகுல்காந்தியிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.