`2 கன்ஃபார்ம் 1 யாருக்கு?’ - அறிவாலயத்தில் நடக்கும் ராஜ்யசபா ரேஸ் | dmk planning for rajyasabha seat

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (11/06/2019)

கடைசி தொடர்பு:19:57 (11/06/2019)

`2 கன்ஃபார்ம் 1 யாருக்கு?’ - அறிவாலயத்தில் நடக்கும் ராஜ்யசபா ரேஸ்

தி.மு.க-வில், நாடாளுமன்றத்துக்குச் செல்லவேண்டிய மக்களவை உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர். மாநிலங்களவைக்கு யார் செல்ல வேண்டும் என்பதை கட்சித் தலைமை விவாதித்துவருகிறது. இதன்மூலம், கட்சிமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்துவிடலாம் என்று கணக்குப்போடுகிறார், ஸ்டாலின். 

ராஜ்யசபா எம்.பிக்கள்


தி.மு.க-வினர் எதிர்பார்த்தபடியே மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க-வில் தொடரும் சலசலப்பு, ஆளும் கட்சி அதிருப்தி காரணமாக இந்த வெற்றி அப்படியே உள்ளாட்சித் தேர்தலிலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சியினர் உறுதியாக உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் உதயநிதிக்கு பொறுப்பு கொடுத்துவிடலாம் என்ற ஐடியாவும் இருக்கிறது. கட்சிக்கு வாக்களித்த தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறார் மு.க.ஸ்டாலின்.

கனிமொழி

 இப்போது தி.மு.கவுக்கு இருக்கும் ஒரு சவால், ராஜ்யசபா சீட்டுகளைப் பிரித்துக்கொடுப்பதுதான். அதற்கான விவாதங்கள்தான் நீண்டுகொண்டிருகின்றது என்கின்றனர், தி.மு.க வட்டாரத்தில். இது தொடர்பாக விசாரித்தபோது, ``தி.மு.க-வில் உள்ள எம்.எல்.ஏ-க்களின் விஜயன்அடிப்படையில் அக்கட்சிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம். அதன்படி மக்களைவைத் தேர்தல், முன்னதாகப் போட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு ஒரு சீட் கன்ஃபார்ம். தி.மு.க-வின் தொழிற்சங்கப்பிரிவான தொ.மு.ச-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சண்முகத்துக்கு ராஜ்யசபா கொடுக்கலாம் என்று தெரிகிறது. பெரும்பாலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல, மீதமுள்ள ஒரு சீட்டுக்குத்தான் பலரின் பெயர்களும் அடிப்படுகின்றன. இது தொடர்பான பெயர்ப் பட்டியல் ஒன்று ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது.  கட்சியின் மூத்த வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான என்.ஆர்.இளங்கோ, இளைஞரணிச்  செயலாளராக இருக்கும் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன், கடலூர் புகழேந்தி, ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோரின் பெயர்கள் லிஸ்டில் இருக்கின்றன.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், நாகை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் ஏ.கே.எஸ். விஜயன்.  அங்கு, தி.மு.க கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் வெற்றிபெற இவரது பங்கு முக்கியமானது. 3 முறை எம்.பி-யாகவும் இருந்திருக்கிறார். இவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. காரணம், பட்டியலின சமூகத்தைச்சேர்ந்தவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதை உடைக்க வேண்டும், இதற்கு சரியான சாய்ஸ் விஜயனாக இருப்பார் என ஸ்டாலின் நம்புகிறார். அவருக்குத்தான் 3-வது சீட்டு ஒதுக்குப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கின்றனர்.