நிபா வைரஸ் பரவியது எப்படி? - மத்திய நிபுணர் குழு சொன்ன முதற்கட்ட தகவல் | Nipah case confirmed in the state was caused by an infected guava

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:14:20 (12/06/2019)

நிபா வைரஸ் பரவியது எப்படி? - மத்திய நிபுணர் குழு சொன்ன முதற்கட்ட தகவல்

பழம்தின்னி வௌவால் கடித்த கொய்யா பழத்தைச் சாப்பிட்டதால் கல்லூரி மாணவனுக்கு நிபா வைரஸ் பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நிபா

கேரள மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பரவிய நிபா வைரஸ் இந்த ஆண்டு மீண்டும் பரவி வருகிறது. கேரளத்தில் நிபா வைரஸ் காரணமாக கல்லூரி மாணவர் மற்றும் ஓர் இளம் பெண் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் நிபா வைரஸ் பரவியதாக அட்மிட் செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய நிபுணர் குழு நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது எப்படி என மத்திய நிபுணர் குழு கேரளத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வின் ஒரு பகுதியாக நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான மாணவனை மத்திய நிபுணர் குழுவினர் நேரில் சந்தித்து விசாரித்தனர்.

நிபா வைரஸ்

அப்போது நிபா வைரஸ் காய்ச்சல் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொய்யாப்பழம் சாப்பிட்டதாக மாணவர் தெரிவித்துள்ளார். அது பழம் தின்னி வெளவால் கடித்த பழமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அது பழம் தின்னி வெளவால் கடித்த பழமா என்பது மாணவருக்கு உறுதியாக தெரியவில்லை என்றனர். இதுகுறித்து மத்திய நிபுணர் குழு எர்ணாகுளம் கலெக்டரிடம் ரிப்போர்ட் அளித்துள்ளனர்.