வடிவேலுவை நெருக்கும் ஐ.டி!- தொடரும் அடுத்தடுத்த சிக்கல் | Income tax department fined 61 lakhs for actor vadivel

வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (12/06/2019)

கடைசி தொடர்பு:16:51 (12/06/2019)

வடிவேலுவை நெருக்கும் ஐ.டி!- தொடரும் அடுத்தடுத்த சிக்கல்

வடிவேலுவின் நேசமணி வேர்ல்டு டிரெண்ட் ஆனதிலிருந்து அவர் குறித்த சர்ச்சைகளும் தொடர்கின்றன. 24ம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து விலகினார். இதனால், இயக்குநர் ஷங்கர்க்கு வடிவேல் ஆறறைக் கோடி நஷ்டத் தொகையாகக் கொடுத்தே ஆக வேண்டுமெனத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து T.சிவா சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தகைய சூழலில், வடிவேல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு 61 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது வருமானவரித்துறை. 

கடந்த, 2008 - 09ம் ஆண்டில், அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், அவர் முறையாகக் கணக்குக் காட்டவில்லை என வருமானவரித் துறைக்குச் சந்தேகம் வர வடிவேலுவின் சென்னை, மதுரை வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதில் அவர் சமர்ப்பித்ததில், கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பணமும், 60 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அது தவிர, 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதற்கான ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடிவேலுக்கு வருமானவரித் துறை அபராதம் விதித்தார்கள்.

வடிவேலுக்கு அபராதம்

அபராதத்தை ரத்து செய்யக் கோரி, வடிவேலு எதிர்மனு தாக்கல் செய்தார். ஆனால், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அவர் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. காரணம், சோதனை நடத்தி, முறையான ஆவணங்கள் இல்லையென 'நோட்டீஸ்' அளித்த பிறகுதான் அவர் முழுக் கணக்கைத் தாக்கல் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, அந்த மனுவை ஏற்க முடியாது எனத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். வடிவேலு அவரைச் சூழ்ந்திருக்கும் எல்லாவிதமான நெருக்கடியிலிருந்தும் மீண்டு விரைவில் வெள்ளித்திரையில் தோன்றி எல்லோரையும் ரசிக்க வைக்க வேண்டுமென்பதே நம் ஆசை.