`மத்திய அரசுக்கு கடந்த கால வரலாறு தெரியவில்லை' - கோவையில் ஸ்டாலின் ஆவேசம் | Central Govt don't know previous history says MK Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (12/06/2019)

கடைசி தொடர்பு:15:39 (12/06/2019)

`மத்திய அரசுக்கு கடந்த கால வரலாறு தெரியவில்லை' - கோவையில் ஸ்டாலின் ஆவேசம்

இந்தி திணிப்பு மு.க.ஸ்டாலின் ஆவேசம்

'நமது எதிர்ப்பைத் தொடர்ந்து வலுவாக வெளிக்காட்டியதன்  காரணமாகத்தான் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு  நிறுத்தி வைத்துள்ளது' என்று கோவையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த தி.மு.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை தென்றல் மு.இராமநாதன் மற்றும்  தி.மு.க தீர்மானக் குழு உறுப்பினராக இருந்த  க.ரா.சுப்பையன் ஆகியோரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆ.ராசா, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இருவரின் படங்களையும் திறந்துவைத்த பின்னர் பேசிய ஸ்டாலின், " நான் கோவைக்கு வரும்போதெல்லாம் என்னை  வரவேற்று ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய மு.ராமநாதன், தற்போது படமாக உள்ளார்.  அவரை நான் படமாகக் கருதவில்லை. அவர் ஒரு  பல்கலைக்கழகம்.

திராவிட இயக்கம், நீதிக்கட்சி, சமூக நீதி, தமிழ் மொழி உள்ளிட்ட பலவற்றைப் பற்றியும் கரைத்துக்குடித்தவர் அவர். நான் உட்பட 
இங்கு இருக்கும் 99 சதவிகிதம் பேர் அவரிடம் படித்தவர்கள்தான். கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காலங்களில் அவர்  ஆற்றிய பணிகளை மறந்துவிட முடியாது. அதேபோல, கா.ரா.சுப்பையனும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தி.மு.க-வின் வளர்சிக்காகப் பாடுபட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தொடர்ந்து பணியாற்றியவர்.

மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்ளை  என வரைவுத் திட்டம் தயாரித்து, அதில் மும்மொழிக்கொள்கை கொண்டுவர வேண்டும் என செய்தி வந்துள்ளது, அவர்கள் கடந்த கால தமிழக வரலாற்றை உணராமல் இருக்கிறார்கள்.  மும்மொழிக்கொள்ளை என்ற வரைவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில்,  தமிழக இளைஞர்கள் பொங்கி எழுவதைப் பார்த்தோம். அதற்கு, கடந்த கால வரலாறுதான் காரணம். 

இந்தியை எதிர்த்து  தி.மு.க பல போராட்டங்களை நடத்தியுள்ளது. இன்று படமாக இருக்கும் இந்த இரண்டு தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்.  இவர்களின் படத் திறப்புவிழா, இந்தச் சூழலில் மிக முக்கியமான விஷயம். மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு  ஈடுபட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு  தொடர்ந்து இப்போதும்  மும்மொழிக்கொள்கைக்கு நமது எதிர்ப்பை வெளிக்காட்டியதன்  காரணமாகத்தான் அதை நிறுத்தி வைத்துள்ளார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க