`தண்ணீருக்காகத் தமிழ்நாடே அலையுது.. ஆனா எங்க ஊர்ல!' - வேலூர் அராஜகம் | Vellore water reservoir and its sad satus

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:10 (13/06/2019)

`தண்ணீருக்காகத் தமிழ்நாடே அலையுது.. ஆனா எங்க ஊர்ல!' - வேலூர் அராஜகம்

வேலூர் நீர் ஏற்று நிலையம் 

வேலூர் மாவட்டம், சார்பனா மேடு பகுதியில் மாநகராட்சியின் நீரேற்று நிலையம் உள்ளது. பாலாற்றிலிருந்து வரும் நீரானது இங்கே பெரிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வேலூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையத்திலிருந்து வரும் நீரிலிருந்து கெட்ட துர்நாற்றம் வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையமே கேட்பாரற்று அசுத்தமாகிச் சிதைந்துள்ளது. இதை நிர்வகிப்பவர் ஒருவர் மட்டுமே உள்ளதாலும் பாதுகாப்புக் குறைவான காரணத்தினாலும் எளிதாகப் பலர் உள்ளே நுழைந்து நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர். தண்ணீர் சேமிக்கப்படும் தொட்டிகளில் இறங்கி குளிப்பது, குடித்துவிட்டு மதுபான பாட்டில்களை வீசுவது, நீர் சேமிப்புத் தொட்டிகளையும் உடைத்துச் சேதப்படுத்துவது என அத்துமீறுகின்றனர். இந்த வளாகத்தின் உள்ளே நுழைவதற்குச் சிதைந்த ஒரு பெரிய உடைந்த ஓட்டையையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

வேலூர் நீரேற்று நிலையம்

நீரேற்று நிலையத்தின் உள்ளேயே திடக்கழிவு மேலாண்மை வளாகமும் உள்ளது. கழிவுகளைச் சரியாக அப்புறப்படுத்தாமல் நீரேற்று நிலையம் முழுவதிலும் குப்பைகளைக் கொட்டியுள்ளனர். மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கும் இடம் தற்போது ஒரு குப்பைக் காடாக காட்சி அளிக்கிறது. ஒருபுறம் மக்கள் நீர்ப் பற்றாக்குறைக்காகப் போராடி வரும் நிலையில், இருக்கும் நீரையும் இங்கு  அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வேலூர்

இப்படி வளாகத்தினுள்ளே நுழைந்து நாசவேலைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டிக்குமாறு காவல்துறையினரைப் பொதுமக்கள் வேண்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துர்நாற்றத்தோடு வரும் தண்ணீரை மாற்ற, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுத்தப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க