`நதிநீர் இணைப்புதான் தண்ணீர் பிரச்னைக்கு முக்கிய தீர்வு!' - பிரேமலதா விஜயகாந்த் | Premalatha vijayakanth speaks about various issues

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/06/2019)

கடைசி தொடர்பு:18:20 (14/06/2019)

`நதிநீர் இணைப்புதான் தண்ணீர் பிரச்னைக்கு முக்கிய தீர்வு!' - பிரேமலதா விஜயகாந்த்

தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் பிரேமலாதா விஜயகாந்த் !

பிரதமரிடம் தண்ணீர் பிரச்னை குறித்து வலியுறுத்த உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

பிரேமலதா

மதுரை அழகர்கோயிலில் தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளின் திருமணவிழாவில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். ``தமிழகம் தற்போது தண்ணீர் பிரச்னையால் சூழ்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே. இதைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன். தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட ஆங்கிலம், இந்தியில் தகவல் பரிமாற்றம் என்ற அறிவிப்பானது சிரமத்தில் ஆழ்த்தும். விமானத்தில்கூட இந்தியில்தான் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, ரயில், விமானங்களில் தமிழில் பரிமாற்றங்கள் இருத்தல் வேண்டும். இனி வரக்கூடிய தேர்தல்களில் எங்களது கூட்டணி வெற்றிபெறும். மிகப்பெரும் வெற்றிக் கூட்டணியாகவும் அமையும். தமிழகம் முழுவதும் சாதியப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. இது சம்பந்தமாக ஆட்சியாளர்களிடம் கண்டிப்பாக வலியுறுத்துவோம்" என்றார்.

மும்மொழி கொள்கை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், ```அன்னை மொழி காப்போம் அனைத்து மொழிகளையும் கற்போம்' என கேப்டன் கூறிய வழியில்தான் எப்போதும். தமிழ்தான் தாய் மொழி. ஆனால், மற்ற மொழியை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத் தமிழை என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்றார்.