Published:Updated:

`6 வயதுச் சிறுமி முதல் 86 வயது முதியவர் வரை...' - கரூரில் கொரோனாவிலிருந்து மீண்ட 16 பேர்

குணமான 6 வயது சிறுமி
குணமான 6 வயது சிறுமி

முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், சிறுமி ஒருவரும் முதியவர் ஒருவரும் கரூர் மாவட்டத்தில் குணமாகி இருப்பது, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதுநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த 6 வயதுச் சிறுமி முதல் 86 வயது முதியவர் வரை மொத்தம் 16 நபர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பழங்கள் கொடுத்து, கைதட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், சிறுமி ஒருவரும் முதியவர் ஒருவரும் கரூர் மாவட்டத்தில் குணமாகி இருப்பது, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதுநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

குணமான 6 வயதுச் சிறுமி
குணமான 6 வயதுச் சிறுமி
பூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்துக்கு அற்பணிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி என்பது இன்றைய சூழலில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் கூடிய மருத்துவக் கல்லூரியில் உயர்தரமான சிகிச்சைகளை மருத்துவர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதனால்தான், கரூர் மட்டுமல்லாது, நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குணமான சிறுவன்
குணமான சிறுவன்

இத்தகைய சூழலில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 5 நபர்களும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 நபர்களும் என மொத்தம் 16 நபர்கள் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி, 10 வயதுச் சிறுவன் மற்றும் 86 வயது முதியவரும் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிப்படைந்த அனைத்து வயதினருக்கும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுவது பொதுமக்களிடம் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் கொரோனா தொற்றுடன், கரூரைச் சேர்ந்த 46 நபர்கள், திண்டுக்கல்லைச் சேர்ந்த 74 நபர்கள், நாமக்கல்லைச் சேர்ந்த 50 நபர்கள் என மொத்தம் 170 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடனர். இவர்களில், கரூரைச் சேர்ந்த 22 நபர்கள், நாமக்கல்லைச் சேர்ந்த 45 நபர்கள் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 55 நபர்கள் என மொத்தம் 122 நபர்கள் இதுவரை பூரண குணமடைந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று அல்லாத நிலையில் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட கரூரைச் சேர்ந்த 45 நபர்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குணமான 86 வயது முதியவர்
குணமான 86 வயது முதியவர்

இந்த நிலையில், கொரேனா தொற்று பாதிப்புடன் கரூரைச் சேர்ந்த 24 நபர்களும், நாமக்கல்லைச் சேர்ந்த 5 நபர்களும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 19 நபர்களும், தொற்று அல்லாத 18 நபர்களும் என மொத்தம் 66 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அன்பழகன், "கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலம் பெறுவதற்காக, தூக்கம் இழந்து, இரவு பகலாக அற்பணிப்பு உணர்வுடன், தங்களது உயிரையும் பணயம் வைத்து சமூக நலனுக்காக பணியாற்றி வரும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த வெற்றி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 குணமான சிறுவன்
குணமான சிறுவன்

அனைவரது கூட்டு முயற்சியாலும், தமிழ்நாடு முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாத்துறை செயலாளர் ஆகியோர் தினந்தோறும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும், அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து, தக்க அறிவுரைகளை வழங்கி வருவதால், இத்தகைய வெற்றி கரூர் மாவட்டத்தில் சாத்தியமாயிற்று. அனைவரின் கூட்டு முயற்சியால் விரைவில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலையினை உருவாக்க அனைவரும் தொடர்ந்து பாடுபடுவோம். கரூர் மாவட்டத்தில் ஒருத்தருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்ற நிலைமை ஏற்படும்" என்றார் நம்பிக்கையுடன்!

அடுத்த கட்டுரைக்கு