வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (19/06/2013)

கடைசி தொடர்பு:15:59 (19/06/2013)

காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை

சென்னை: ஒரு ஜோடி காண்டாமிருகம் வழங்குமாறு அசாம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அதற்கு பதிலாக ஒரு ஜோடி இந்திய காட்டெருமைகளை வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வரும், தமிழ்நாடு விலங்கியல் ஆணைய தலைவரும் என்ற முறையில் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவில் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா ஆகும். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும்.

இந்த விலங்கியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு இன வனவிலங்குகள் உள்ளது. நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விலங்கியல் பூங்காவில் 143 இனத்தை சேர்ந்த 1400 விலங்கினங்கள் உள்ளன. ஒற்றை கொம்பு கொண்ட காண்டாமிருகம் 1985ஆம் ஆண்டு முதல் 1989 வரை இங்கு இருந்தது. இந்த மிருகம் 1989ஆம் ஆண்டு இறந்தது. அதன் பின்னர் எங்கள் மிருக காட்சிசாலைக்கு இதுபோன்ற விலங்கு இல்லை.

மிகவும் பிரபலமான இந்த உயிரியில் பூங்காவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்வதால் அந்த வகை காண்டாமிருகம் மீண்டும் தேவை என கருதுகிறோம். எங்களிடம் போதுமான அளவு இந்திய காட்டெருமைகள் உள்ளது. இதை அசாம் அரசுக்கு பரிமாற்ற முறையில் நாங்கள் வழங்குகிறோம்.

எனவே எங்களுக்கு ஒரு ஜோடி ஒற்றை காண்டாமிருகம் வழங்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதிலாக பரிமாற்ற முறையில் ஒரு ஜோடி இந்திய காட்டெருமைகளை வழங்குகிறோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்