வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (29/06/2013)

கடைசி தொடர்பு:12:07 (29/06/2013)

பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை நீட்டிப்பு: மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சியுடன் நிறுத்தம்!

சென்னை: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரியல் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:12605/12606) காரைக்குடி வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(16127/16128) மதுரை வரை இணைக்கப்படும் என்றும் ஒரு பகுதி ரயில்(16129/16130) தூத்துக்குடி வரை செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதே போன்று மங்களூரில் இருந்து திருச்சி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(12653/12654) புதுச்சேரி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்(16877/16878) திருச்சியுடன் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தூரம் நீட்டிப்பு மற்றும் குறைப்பு சேவை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால் சென்னை சென்டிரலில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ்(16089/16090) வருகிற 1ஆம்  தேதி முதல் ஜோலார்ப்பேட்டை வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்