'மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் பெண் காவலர்கள் நிம்மதியாய் இல்லறம் நடத்த முடியும்' - திலகவதி தடாலடி | Thilagavati, female police, sexual harassment, Tamil Nadu Police

வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (08/07/2013)

கடைசி தொடர்பு:12:23 (22/08/2018)

'மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் பெண் காவலர்கள் நிம்மதியாய் இல்லறம் நடத்த முடியும்' - திலகவதி தடாலடி

'மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் பெண் காவலர்கள் நிம்மதியாய் இல்லறம் நடத்த முடியும்' - திலகவதி தடாலடி

''காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் தங்களின் இல்லற வாழ்க்கையை சுமூகமாக நடத்த முடியும்'' - முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியும் சமூக சிந்தனையாளருமான திலகவதி தெரிவித்திருக்கும் இந்த கருத்து காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது!

காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழக அரசு. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஐ.ஜி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள், ஒரு பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட ஐந்து பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு குறித்து பி.பி.சி-யில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயரதிகாரியான திலகவதி, ''காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாய் இருக்க முடியும்.  காவல் துறை உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் காவலர்களை தங்களது மகளாக, சகோதரியாக குறைந்த பட்சம் சக ஊழியராக கூட மதிப்பதில்லை. அதனால் தான் பெண் காவலர்களிடம் அவர்கள் வேறு மாதிரியான பிரதிபலனை எதிர்பார்க்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, பெண் காவலர்கள் தற்கொலை செய்யப்படும் சம்பவங்கள் தற்போது தமிழக காவல் துறையில் நடந்து கொண்டிருக்கின்றன.

 

 

இதுபோன்ற பிரச்னைகளை விசாரிக்கும் இடத்தில் முன்பு நான் இருந்தபோது, பெண் காலவலர்கள் பல பேர், மேலதிகாரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையிட்டார்கள். ஆனால்,  'எழுத்துப்பூர்வமாக புகாராக தரமுடியுமா?'' என்று கேட்டபோது அவர்கள் அனைவருமே பின் வாங்கி விட்டனர். இதுதான் பல அதிகாரிகளுக்கு சாதகமான விஷயமாகி விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், விசாரணை அதிகாரியாக இருப்பவர்கள், புகாருக்காக காத்துக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி அவரது பணிச்சுமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம், பெண் காவலர்களுக்கு எதிரான பாலியல் டார்ச்சர்கள் ஓரளவாவது குறையும்" என்று பேசி இருக்கிறார்.

திலகவதியின் இந்த தடாலடி கருத்துப் பதிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை பற்றவைத்துப் போட்டிருக்கிறது!

- குளஸ்

 

 


டிரெண்டிங் @ விகடன்