வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் அவர் ஆன் லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!