முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளது: கேரளா புகார்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு புகார் கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் இன்று 3வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு  தனது வாதத்தை முன்வைத்தது.

கேரளா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீத் சால்வே, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் குழு தவறான புள்ளி விவரம் தந்துள்ளதாகவும், புள்ளி விவரங்களில் வேறுபாடு உள்ளதை நிபுணர் குழு அமைத்து நிரூபிக்க தயார் என்றும் வாதிட்டார்.

2011ல் ஆனந்த் குழு அறிக்கை அளித்தபோது ஏன் கேரளா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புள்ளி விவரம் பற்றி மாநிலங்களுக்கு தெரியும் என ஆனந்த் குழு கூறியுள்ளது என்றனர்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லை என்றால், 136 அடி நீரை தேக்குவது ஏன்? என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!