விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்!

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மிரட்டல் வந்ததையடுத்து ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலையில் இருந்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.

இதேபோல், சென்னையில் மயிலாப்பூர், மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
 
இதேபோல், மதுரை, கோவை, நாகை, சேலம் போன்ற நகரங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதவிர ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சிலைகளும் பொது இடங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்கிறார்கள்.

தீவிரவாதிகளின் மிரட்டல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசாரும், மற்ற நகரங்களில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!