16,726 துப்புரவு பணியாளர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: 147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிராமங்களை தூய்மையாக வைத்திருக்க அடிப்படையாக இருப்பவர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆவார்கள்.

தற்பொழுது ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை, அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லாமல் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் தூய்மை கிராம இயக்கத்தினை நன்முறையில்  செயல்படுத்த மக்கள் தொகை 3,000க்கும் கீழ் உள்ள 8,469 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக ஒன்று வீதமும், 3,001 முதல் 10,000 வரை உள்ள 3,908 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு வீதமும், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 147 கிராம ஊராட்சிகளில், ஒவ்வொரு  கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக மூன்று வீதமும், ஆக மொத்தம் 16,726 துப்புரவு பணியாளர் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு  மாதந்தோறும் தொகுப்பூதியமாக 2,000 ரூபாயும், அகவிலைப் படியாக 40 ரூபாயும் வழங்கப்படும்.  இதன் மூலம்  ஆண்டொன்றுக்கு 41 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!