வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (01/10/2013)

கடைசி தொடர்பு:13:48 (01/10/2013)

பண்டிகை கால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து திருப்பதி வழியாக கச்சிகுடாவுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

தசரா, தீபாவளி பண்டிகை காலம் தொடங்கிவிட்டதால் பல்வேறு நகரங்களில் தொழில் நிமித்தமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கடந்த 29ஆம் தேதி முதல் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் ஓடத்தொடங்கிவிட்டன.

இன்று முதல் நாகர்கோவிலில் இருந்து ஆந்திரா மாநிலம் கச்சிகுடாவுக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக கச்சிகுடாவுக்கு செல்கிறது.

வரும் நவம்பர் மாதம் வரை இரண்டு மாதங்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்