Published:Updated:

தூத்துக்குடி: சிறிய விமானம், 120 படகுகள் - நடுக்கடலில் மாயமான 2 மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

மீனவர்களைத் தேடும் பணி

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றபோது நடுக்கடலில் மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 3-வது நாளாகத் தொடர்ந்துவருகிறது. விமானம், ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் தேடப்பட்டுவரும் நிலையில், 120 படகுகளில் மீனவர்களும் தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி: சிறிய விமானம், 120 படகுகள் - நடுக்கடலில் மாயமான 2 மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

தூத்துக்குடியில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றபோது நடுக்கடலில் மாயமான இரண்டு மீனவர்களைத் தேடும் பணி 3-வது நாளாகத் தொடர்ந்துவருகிறது. விமானம், ஹெலிகாப்டர், கப்பல்கள் மூலம் தேடப்பட்டுவரும் நிலையில், 120 படகுகளில் மீனவர்களும் தேடிவருகிறார்கள்.

Published:Updated:
மீனவர்களைத் தேடும் பணி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ளது அமலிநகர் மீனவ கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தினசரி நள்ளிரவு ஃபைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுவிட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்துவருகிறது. அதேபோல் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அன்று மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற படகுகள் மாலையில் கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின், பிரசாத், பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் சென்ற படகு மட்டும் கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததைப் பார்த்த மற்ற மீனவர்கள் காப்பாற்றியிருக்கின்றனர்.

பிரசாத் - அஸ்வின்
பிரசாத் - அஸ்வின்

அஸ்வின், பிரசாத் ஆகியோரைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இந்தத் தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் ஏழு படகில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாயமான மீனவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், இன்று திருச்செந்தூரைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், 120 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீட்புப்பணி குறித்து தமிழ்நாஉ மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``கடலோர காவல்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் மூலமும், சிறிய விமானம் மூலமும் மாயமான மீனவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்தப் பகுதி மீனவர்களும் பல்வேறு படகுகளில் சென்று மீனவர்களைத் தேடிவருகிறார்கள். காணாமல்போன மீனவர்கள் நல்லபடியாக வீடு திரும்பி வருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

மீனவ சங்கத்தினருடன் ஆலோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீனவ சங்கத்தினருடன் ஆலோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

நான் இந்தப் பகுதி மீனவர்களிடம் நேரில் பேசும்போது, `எங்கள் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் இரண்டு மணி நேரத்தில் நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு வேகமாகச் செல்லக்கூடிய மீட்புப் படகுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் நாங்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எந்த இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறோம் எனக் கரையிலுள்ள மீனவர்கள் கண்டறியும் வகையில் ’ரேடர் கருவி’ அமைக்க வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.