Published:Updated:

`சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலருக்கு கொரோனா தொற்று!’ - மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

மதுரை கொரோனா மருத்துவமனை
மதுரை கொரோனா மருத்துவமனை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளராருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மதுரையில் மாநகரக் காவல்துறை சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் அதிர வைத்துள்ளது.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு
ஈ.ஜெ.நந்தகுமார்

இதைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட அளவில் காவல்துறையினருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரொனோவால் முதல் பலி ஏற்பட்டதுமில்லாமல் கொரோனா தொற்று அதிகம் பரவக்கூடிய நகரமாக மதுரை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 5 மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்று.

சமீபத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது, மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளராருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதோடு அவர் வசிக்கும் பழங்காநத்தம் பகுதியில் சில தெருக்கள் லாக் செய்யப்பட்டன.

மதுரை கொரோனா மருத்துவமனை
மதுரை கொரோனா மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

இதுபோல், போக்குவர்த்து தலைமைக் காவலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் வசிக்கும் க்ரைம் பிராஞ்ச் குடியிருப்புப் பகுதியும் லாக் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் இவர்களுடன் தொடர்பில் இருந்த காவல்துறையினர், உறவினர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு பரிசோதனை செய்ய தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தெற்குவாசல் காவல் நிலையம் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை தற்காலிகமாக இட மாற்றம் செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.

சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயது தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது அவர் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் 35 வயதுள்ள ஆணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அர்ச்சகர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததன் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதனால், அர்ச்சகர்கள், அவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையம்
காவல் நிலையம்

மக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு