Published:Updated:

எமனாக வந்த லாரி; உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள் - தந்தையும் படுகாயம்... ஆம்பூரில் சோகம்!

உயிரிழந்த சகோதரிகள்

ஆம்பூரில், தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்ற 2 மாணவிகள், லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

எமனாக வந்த லாரி; உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள் - தந்தையும் படுகாயம்... ஆம்பூரில் சோகம்!

ஆம்பூரில், தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்ற 2 மாணவிகள், லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Published:Updated:
உயிரிழந்த சகோதரிகள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகிலிருக்கும் குமாரமங்கலம் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு 17 வயதில் ஜெயஸ்ரீ, 11 வயதில் வர்ஷாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். ஜெயஸ்ரீ, ஆம்பூர் புதுகோவிந்தாபுரத்திலிருக்கும் ஸ்ரீவித்யா விஹார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தங்கை வர்ஷாஸ்ரீயும் அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் காலையில் மகள்கள் இருவரையும் பைக்கில் அழைத்துச்சென்று பள்ளியில் விட்டுவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தண்டபாணி. இன்று காலை வழக்கம்போல, பள்ளிக்கு மகள்களை பைக்கில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து வேலூர் நோக்கி பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று, தண்டபாணி சென்ற பைக்மீது மோதியது.

விபத்து ஏற்படுத்திய லாரி
விபத்து ஏற்படுத்திய லாரி

விபத்து ஏற்படுத்திய லாரி, தேசிய நெடுஞ்சாலை தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு சர்வீஸ் சாலையில் இறங்கியது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கோர விபத்தில், தண்டபாணியின் இரு மகள்களும் உடல்நசுங்கி துடிதுடித்து இறந்தனர். தண்டபாணியும் படுகாயமடைந்தார். பொதுமக்களால் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விபத்து தொடர்பாக, ஆம்பூர் நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து ஓட்டுநரை தேடி வருகிறார்கள். விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த காட்சியில், மாணவிகள் தந்தையோடு பைக்கில் செல்வதும், கன்டெய்னர் லாரி அதிவேகமாக மோதி விபத்து ஏற்படுத்துவதும் பதிவாகியிருக்கிறது. இந்தச் சம்பவம், உறவினர்களையும், ஆம்பூர் பகுதி மக்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.