மழலைப் பேச்சு, கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதிலும் அவர்கள் பாடல்கள், தகவல்கள் எனக் கற்றுக்கொண்டு சொல்லி மொழியில் அற்புதங்கள் நிகழ்த்தும்போது அவர்களது நினைவாற்றல் ஆச்சர்யத்தின் உச்சிக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். அப்படி ஒரு சுட்டிதான், 2 வயதே ஆகும் சனந்தா. தன் மழலைப் பேச்சாலும், நினைவாற்றலாலும் சாதனைகளை நிகழ்த்திப் பாராட்டுகளைப் பெற்று வரும் குட்டிப் பூ. திருவண்ணாமலையை சேர்ந்த மகேந்திரன் - லாவண்யா தம்பதியின் குழந்தை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரண்டு வயதிலேயே, தகவல்களைக் கற்றுக்கொள்வதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தால் ஆன்லைன் போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் பெற்று வருவதோடு மட்டுமன்றி `கலாம் உலக சாதனை விருது', `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய இரு சாதனைப் புத்தகங்களிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார் இந்தச் சுட்டி. சனந்தாவின் சாதனைப் பயணம் குறித்து அவரின் அம்மா லாவண்யாவிடம் பேசினோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``சனந்தாவுக்கு ஒரு வயசு இருக்கும்போது குழந்தைகளுக்கான புக் ஒண்ணு வாங்கினோம். அதுல பழங்கள், காய்கறிகள், விலங்குகள் எல்லாம் இருந்துச்சு. பாப்பா பிறந்து 1 வயசு 5 மாதம் ஆனபோதே அந்த புக்ல இருக்கிறதெல்லாம் கண்டறிந்து அவற்றின் பெயரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதெல்லாம் பின்னாளில் ஒரு ஞாபகமா இருக்குமேனு வீடியோ எடுத்து வைக்க ஆரம்பிச்சோம்.
பாப்பாக்கு 1வயசு 9 மாதம் ஆனப்போ கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கு அப்ளை பண்ணினோம். அப்போ அவங்களுக்கு பாப்பாவோட 15 வீடியோகிட்ட அனுப்பி வெச்சோம். இன்னும் சில வீடியோக்களை அனுப்பி வையுங்கனு சொன்னாங்க. பின்னர், கூடுதலா வீடியோ எடுத்து அனுப்பியிருந்தோம். ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமா குழந்தை சொல்வது உண்மைதான் அப்படீனு உறுதிப் படுத்திக்கிட்டாங்க.
7 நாட்டின் தேசிய சின்னங்கள், காய்கறிகள், வாகனங்கள், பொதுப் பொருள்கள், விளையாட்டுகள், பழங்கள், பறவைகள் போன்றவற்றை கண்டறிந்து கூறுவது, 25 சைகை மொழிகளை செய்து காண்பிப்பது, 12 விலங்குகளோட சத்தங்களை அறிவது, ஆங்கில அல்ஃபபெட்கள், ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்வது போன்ற விஷயங்களை பண்ணியிருந்தாங்க.
அதன் பின், `Extraordinary Grasping Power Genius Kid' என்று கலாம் உலக சாதனை புத்தகத்தில் இருந்து விருது கொடுத்தாங்க. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இருந்து பாராட்டி சான்றிதழ் கொடுத்தாங்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதுக்கு அப்புறமா கலெக்டர் முருகேஷ் சாரை பார்த்து வாழ்த்துப் பெற்றோம். இதெல்லாம் எங்க வாழ்க்கையில மறக்க முடியாத நாள்கள். சனந்தா எந்தளவுக்குக் கற்றுக் கொள்வதில் ஆர்வமா இருக்காங்களோ, அதே அளவுக்கு சுட்டியும் கூட. அவங்களுக்கு மூணு மாசத்துல ஒரு தங்கச்சி பாப்பா இருக்காங்க. `என் பாப்பா... நான்தான் பாத்துப்பேன்...'னு சொல்லி தங்கச்சி மேல அவ்ளோ அன்பா, அக்கறையா இருப்பாங்க.
சமீபத்துல, பெல்ஸ் அகாடமி நடத்திய ஆன்லைன் போட்டியில் சனந்தா திருக்குறள் ஒப்பித்தாங்க. `The Whiz Kids' ஆன்லைன் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினாங்க. தேசிய அளவிலான குழந்தைகள் புதிர்ப்போட்டியிலும் கலந்துக்கிட்டாங்க.

கடந்த மகளிர் தினம் அன்று, ரோட்டரி சங்கம் மூலமாக `Successful child and super brain award' கொடுத்தாங்க. வள்ளலார் திருச்சபை சார்பாக, சாதனை மகளிர் விருது கொடுத்திருக்காங்க. பாப்பா, இப்போ 15 திருக்குறள் வரைக்கும் சொல்லுறாங்க. அதுக்காக, கம்பன் தமிழ் சங்கத்தினர், `தாய்மொழி தினம்' அன்று பொன்னாடை போற்றி வாழ்த்தினாங்க. இது எல்லாமே எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இப்பக்கூட, சனந்தாவுக்கு விளையாட சொப்பு சாமான் நிறைய வாங்கிக் கொடுத்திருக்கோம். ஆனா, திருக்குறள் புத்தகத்தை எடுத்துட்டு வந்து `சொல்லிக் கொடுங்க'னு கேட்குறப்போ... எங்க ஆச்சர்யமும் சந்தோஷமும் வளர்ந்துட்டே இருக்கு'' என்றார் பூரிப்புடன்.
சுட்டி சனந்தாவின் சாதனைப் பயணம் தொடரட்டும்!