Published:Updated:

`1 ரூபாய் போட்டால் 1 குடம் தண்ணீர்!'- புதுக்கோட்டையில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அரசு

1 ரூபாய் போட்டால் 1 குடம் குடிநீர்
1 ரூபாய் போட்டால் 1 குடம் குடிநீர்

முன்னாள் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் ஒத்துழைப்பால், தமிழகத்திலேயே முதல்முறையாக அரசின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் ஏம்பல் கிராமத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

தமிழக அரசின் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் சுமார் 1,580 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்காக 64 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ஆரம்பக்கட்ட பணிகளே துவங்காத நிலையில், அரிமளம் அருகே ஏம்பல் கிராமத்தில் ரூ.8 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

`1 ரூபாய் போட்டால் 1 குடம் தண்ணீர்!'- புதுக்கோட்டையில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அரசு

ஏம்பல் கிராம, முன்னாள் மாணவர்களின் விடா முயற்சி மற்றும் ஒத்துழைப்பால், தமிழகத்திலேயே முதல்முறையாக அரசின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் இங்கு சாத்தியமாகி இருக்கிறது. இங்குள்ள மேல்நிலைத் குடிநீர்த் தொட்டி அருகே இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர்த் தொட்டியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

1 மணி நேரத்துக்கு 1,000 லிட்டர் வீதம் சுத்திகரிக்கப்பட்டு நாளொன்றுக்கு 12,000 லிட்டர் வரையிலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தியதும் ஒரு சில விநாடிகளில் 20 லிட்டர் (1குடம்) தண்ணீர் வருகிறது. 20 லிட்டர் குடிநீர் குடத்தில் நிரம்பியவுடன் தானாகவே நின்று விடுகிறது. அதன்பின்பு, மீண்டும் நாணயத்தைப் போட்டவுடன் குடிநீர் வருகிறது.

`1 ரூபாய் போட்டால் 1 குடம் தண்ணீர்!'- புதுக்கோட்டையில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அரசு

இந்தச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடிப்பதற்குச் சுவையாக இருப்பதால், கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ``இந்தப்பகுதியில் இதுக்கு முன்னால வரைக்கும் குடிநீர் தொட்டியில இருந்து உப்புத் தண்ணீ மட்டும்தான் கிடைச்சது. ஊர்ல உள்ள குடிநீர் குளத்தைத்தான் பலரும் குடிநீருக்காகப் பயன்படுத்திக்கிட்டு வந்தோம். அந்தக் குளத்தில நீர் வற்றிடுச்சு. அதுக்கப்புறம், பலரும் ஒரு குடம் ரூ.12 கொடுத்துத்தான் வாங்கிக்கிட்டு இருக்கோம். இப்போ, 1 ரூபாய்க்கு தண்ணீர் கிடைக்குது.

அதோட, தண்ணீரும் சுவையா இருக்குது. பாதியிலேயே இந்தத் திட்டத்தை நிறுத்திடாமல், தொடர்ந்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்யணும்" என்றனர். முன்னாள் மாணவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ``காசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியாதவங்க எல்லாரும், உப்புத் தண்ணீரைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தாங்க. இதனால, சிறுநீரகக் கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அவங்களுக்கு வந்துச்சு. என்ன செய்யிறதுன்னு தெரிஞ்சப்பதான், கிராமங்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் இருப்பது எங்களுக்குத் தெரிய வந்துச்சு.

`1 ரூபாய் போட்டால் 1 குடம் தண்ணீர்!'- புதுக்கோட்டையில் புதிய திட்டத்தைத் தொடங்கிய அரசு

அந்தத் திட்டத்தை எங்க ஊருக்குக் கேட்டோம். அதிகாரிகள் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. வேலை ஆரம்பித்ததில் இருந்து ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சோம். அரசு திட்டமா இருந்தாலும், முடிகிற வரைக்கும் எங்களால முடிந்தவற்றை செஞ்சோம். அதுக்கு இன்னைக்கு எங்களுக்கு பலன் கிடைச்சிருக்கு" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு