Published:Updated:

சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்... உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாததால் பயணிகள் கடும் அவதி!

பயணிகள் அவதி

ரயில்வே பாலப்பணியால், சேலம் வழியாக செல்லும் 20 ரயில்கள் நேற்று தாமதமாகின. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.

சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்... உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாததால் பயணிகள் கடும் அவதி!

ரயில்வே பாலப்பணியால், சேலம் வழியாக செல்லும் 20 ரயில்கள் நேற்று தாமதமாகின. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகினர்.

Published:Updated:
பயணிகள் அவதி

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மேக்னசைட் ரயில்வே நிலையம் அருகே கருப்பூரில் ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி நேற்று நடந்தது. இதனால், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 16 ரயில்கள் தாமதமாகும் என்று இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்ட நேரத்துக்குள் பாலப்பணிகள் முடிவு பெறாததால், சேலம் வழியாகச் செல்லும் 20 மேற்பட்ட ரயில்கள் நான்கு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தாமதமாகின.

சேலம் வழியாக வந்த 20 ரயில்கள் தாமதம்... உரிய நேரத்தில் பணிகள் முடிவடையாததால் பயணிகள் கடும் அவதி!

இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதுடன், தண்ணீர், சாப்பாடு கிடைக்காமல் குழந்தைகளுடன் பெரும் அவஸ்தைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாக, நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-தன்பாத் ஆகிய விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து ரயிலில் பயணித்து வந்த பயளிகளிடம் பேசியபோது, “ஒரு முன் திட்டமிடல் இல்லாமல் ரயில்வே நிர்வாகம் செயல்பட்டிருக்கிரது. பச்சிளங்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. உணவு எதுவும் கிடைக்கவில்லை. ரயிலை நடுக்காட்டில் நிறுத்திவைத்துள்ளனர். தாமதமாகும் என்று தெரிந்த பிறகும் உணவு கிடைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கலாம். இதனால் பலர் ரயிலிலிருந்து இறங்கி நடந்தே சென்று அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறிச் சென்றனர்.

ரயில் தாமதமானது குறித்து ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ``வழக்கமாக ரயில்வே பணிகள் நடைபெறும்போது இரண்டு நாள்களுக்கு முன்பே அது குறித்து அறிவிக்கப்படும். அவ்வாறுதான் இந்த முறையும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பாலப்பணி என்பதால் உரிய நேரத்தில் முடிக்கக்கூடிய வேலை கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது” என்றனர்.