Published:Updated:

தமிழ்நாடு தினம்... பிளாஸ்டிக் தடை... புதிய மாவட்டங்கள்... தமிழ்நாட்டில் 2019-ல் நடந்த மாற்றங்கள்!

தமிழ்நாடு தினம் 2019
தமிழ்நாடு தினம் 2019

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் முதல் கீழடி அகழாய்வு வரை, தமிழ்நாட்டில் நடந்த சில முக்கியமான விஷயங்கள்!

2019-ல் பல மாற்றங்களைக் கண்டது தமிழ்நாடு. அவற்றில் சில...

தமிழ்நாடு தினம் 

சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரியாக பிரிக்கப்பட்ட கேரளமும் கர்நாடகமும் தாங்கள் உருவான தினமாக நவம்பர் 1ஐ, 1956 முதல் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்கள் பிரிந்து சென்றமையாலோ என்னவோ தமிழகம் இத்தனை வருடமாக இதைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்தியதில்லை. ஆனால், இனிவரும் வருடங்களில் நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாகக் கொண்டாட வேண்டுமென்று முதல்வர் அறிவித்தார், அதன்படி பிரித்து 63 வருடங்களுக்குப் பிறகு 2019-ல் முதல் முதலாக தமிழ்நாடு தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

கீழடி 

பலதரப்பட்ட இன்னல்களுக்கிடையில் நடைபெற்ற கீழடி அகழாய்வு இந்தியாவின் வரலாற்றையே தெற்கிலிருந்து எழுதும்படியான முடிவுகளை அளித்தது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி பிராமி எழுத்துகள் மேலும் முன்னூறு வருடம் பழைமையானது தமிழ் மொழி என்பதை உறுதி செய்திருக்கிறது. இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்ய அனுமதி கோரிய அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிந்து சமவெளியில் நடத்தும் ஆய்வுக்கு அளிக்கும் உத்வேகத்தை கீழடியில் காட்டாமல் போனதுடன் சிவகங்கைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட தகடுகளைக் கொண்டுபோய் மைசூரில் மியூசியம் வைப்பதற்கான முயற்சியிலும் இறங்கியது மத்திய அரசு. அதையெல்லாம் முறியடித்து மதுரையில் அமையவிருக்கிறது அருங்காட்சியகம்.

கீழடி
கீழடி

சீன அதிபர் வருகை 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இமயமலை இருப்பதால் மட்டுமே போர் வரவில்லை என்று பலவருடங்களாக கூறிவரும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இரு பிரதமர்கள் சந்திப்பு மிகுந்த பாதுகாப்புடன் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சென்னையில் அவர்கள் பயணிக்கும் சாலைகள் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தன, சுவர்கள் வரைபடங்களால் நிரப்பப்பட்டன.

modi, xi jinping
modi, xi jinping

இரண்டாகப் பிரிந்த அண்ணா பல்கலைக் கழகம்  

பலவருடங்களாக அண்ணாவின் பெயரில் இயங்கிவரும் தமிழகத்தில் பொறியியலின் முதன்மை பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்திருந்தது. மத்திய அரசின் சிறப்புக் கட்டுப்பாட்டுக்குள் இயங்குமென மத்திய அரசு தெரிவித்திருந்ததை அடுத்து, தமிழக அரசு அதே பேரில் இன்னொரு பல்கலைக்கழகம் நிறுவப்போவதாகவும் அறிவித்ததால், பலவருட பாரம்பர்யம் நிறைந்த பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிவதாக தெரிகிறது.

Anna University
Anna University

புதிய மாவட்டங்கள்

நகராட்சிகளின் வளர்ச்சி கருதியும் மாவட்டங்களின் பரப்பளவு கருதியும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உதயமாயின. விழுப்புரத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியைத் தலைமையாய்க் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவானது. அதேபோல் வேலூரை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தென்காசியைத் தலைமையாகக் கொண்டு திருநெல்வேலியிலிருந்து கடையநல்லூர், புளியங்குடி ஊராட்சிகளைப் பிரித்து ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வணிகத் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது.

புதிய மாவட்டம் தொடக்க விழா
புதிய மாவட்டம் தொடக்க விழா

இப்படி மளமளவென 32 என்ற கணக்கு 37 ஆக உயர்ந்து அதிக மாவட்டங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் அஸ்ஸாம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை முந்திக்கொண்டு நான்காமிடம் பிடித்தது தமிழகம்.

மகனுக்குக் கல்யாணம்... ஒரு மாத கால பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற இராபர்ட் பயஸ்!

களம் கண்ட வாரிசுகள் 

தமிழக அரசியலில் பல வாரிசுகள் கால்பதித்திருந்தாலும் இந்த வருடம் முக்கியமான இரு வாரிசுகள் பேசுபொருளாயினர். நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் போட்டியிட்டு வென்று அமைச்சரானார் ஓ.பன்னீர் செல்வத்தின் வாரிசு ஓ.பி.ரவீந்திரநாத் குமார். எல்லாத் தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்ற அந்த ஒற்றைத் தொகுதியில் வென்று நாடாளுமன்றம் சென்றார். தி.மு.க-வில் இளைஞரணித் தலைவராக ஸ்டாலினின் மகன் உதயநிதி அறிவிக்கப்பட்டார். இளைஞரணிக் கூட்டங்கள், குடியுரிமைச் சட்ட நகல் கிழிப்பு என்று அவரும் பிஸியாக களமிறங்க போட்டி வலுக்கிறது.

உதயநிதி ஓ.பி.எஸ்
உதயநிதி ஓ.பி.எஸ்

பிளாஸ்டிக் தடா! 

பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வுகள் பேச்சளவில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பலவருடங்களாக கற்பிக்கப்பட்டு வந்திருந்தாலும் கற்பிப்பவராலேயே அதை கடைப்பிடிக்க முடியாதபடிதான் நம் சமூகம் பாலிதீன் கவர்களோடு பிணைக்கப்பட்டிருந்தது. 2018-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமென்றபோது பலரால் அது சாத்தியமில்லை என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால், அத்தனையும் தவிடுபொடியாக்கும்படி அதிரடியாக பால் மற்றும் எண்ணெய் பொருள்கள் தவிர்த்து வேறெதுவும் பாலிதீன் பைகளில் விற்பனை செய்யக்கூடாதென்பது அமலுக்கு வந்தது.

பிளாஸ்டிக் பை
பிளாஸ்டிக் பை

அதைக் கடைப்பிடிப்பது கடினமென நினைத்த பலரும் வியக்குமளவுக்கு அதற்கான மாற்றாக துணிப் பைகளில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள், தாமரை இலையில் இறைச்சி, தொன்னையில் உணவு என்று வணிகர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

- ஜான் ஜே ஆகாஷ்

அடுத்த கட்டுரைக்கு