வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (17/10/2013)

கடைசி தொடர்பு:13:20 (17/10/2013)

அண்ணாவின் சேது திட்டத்தை தடுக்க முயல்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: அண்ணா அறிவித்த சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தீட்டிய திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தடைபோடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவித்த சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது முதலமைச்சர் ஜெயலலிதாதான் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணா தீட்டிய சேது சமுத்திரத் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால், தமிழகத்தில் பல துறைமுக நகரங்கள் தோன்றியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேது திட்டம் எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக்கூடியது என்றும், வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்