தீவிரவாதி பிலால் மாலிக் சிறையிலடைப்பு: நாளை முதல் வீடியோ கான்பரன்ஸில் விசாரணை | 2-day judicial custody for terrorist Bilal Malik!

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (17/10/2013)

கடைசி தொடர்பு:14:23 (17/10/2013)

தீவிரவாதி பிலால் மாலிக் சிறையிலடைப்பு: நாளை முதல் வீடியோ கான்பரன்ஸில் விசாரணை

வேலூர்: தீவிரவாதி பிலால் மாலிக்கின் காவல் முடிவடைந்தையடுத்து வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். நாளை முதல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்து தலைவர்கள் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திர மாநிலம் புத்தூரில் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட தீவிரவாதி பிலால் மாலிக்கை 11 நாள் காவலில் எடுத்தது முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

புத்தூரில் அவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கு பிலால் மாலிக்கை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஆய்வு நடத்திய காவல்துறையினர், அங்கிருந்து முக்கிய ஆவணங்கள், டைரி, போட்டோக்கள் உள்ளிட்டவறை கைப்பற்றினர்.

இந்நிலையில், பிலால் மாலிக்கின் காவல் நேற்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இன்று வேலூர் மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, பிலால் மாலிக்கிடம் விசாரணை முடிந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) ரேவதி உத்தரவிட்டதோடு, நாளை முதல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் தீவிரவாதி பிலால் மாலிக் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்றொரு குற்றவாளியான பக்ரூதீனின் போலீஸ் காவல் நாளை முடிவடைய இருக்கிறது. இதையடுத்து, நாளை பக்ரூதீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


ஏ.சசிகுமார்

படம்: ச. வெங்கடேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்