Published:Updated:

21 மீனவர்கள், 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு! - கொந்தளிக்கும் நாகை மீனவர்கள்

நாகை மீனவர்கள்

``இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு இனியும் ஒன்றிய அரசு மெளனம் காத்திருக்காமல் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

21 மீனவர்கள், 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு! - கொந்தளிக்கும் நாகை மீனவர்கள்

``இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு இனியும் ஒன்றிய அரசு மெளனம் காத்திருக்காமல் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Published:Updated:
நாகை மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள சம்பவம்  மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மீனவர்கள்
நாகை மீனவர்கள்

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவக்  கிராமத்தைச்  சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், தேவா, வெற்றி, ஆறுமுகம், மணி, செல்வம், குணால், ஹரிகரன், வினோதன், கந்தன், நரசிம்மன், அமிர்தலிங்கம் ஆகிய 12 பேர் நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 29 -ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச்  சென்றனர்.

அதேபோல் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்குச்  சொந்தமான படகில் எழில், கலைச்செல்வன், பன்னீர், அர்ஜுன், அருள்ராஜ், சந்திரன், பரதன், விக்ரம், பிரகலாதன் ஆகிய ஒன்பது பேர் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 29 -ம் தேதி மீன்பிடிக்க விசைப்படகில் சென்றனர். இவர்கள் வேதாரண்யம் கோடியக்கரையின் தென்கிழக்கே இந்திய எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது இலங்கை மீனவர்கள் வந்து தமிழக மீனவர்களை சுற்றிவளைத்து தகராறு செய்துள்ளனர். இதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அச்சமயம்  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளிலிருந்த நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களையும்  எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி கைதுசெய்தனர். பின்னர் இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை இலங்கை மயிலட்டி துறைமுகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று முன்தினம் முதல் பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில்,  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச்  சேர்ந்த இரண்டு விசைப்படகுகளையும், 21 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைதுசெய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மீனவர்கள்
நாகை மீனவர்கள்

இது குறித்து நாகை மீனவர்களிடம் பேசினோம். ``இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 மீனவர்கள் இன்னும் ஊர் திரும்பவில்லை. இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 105 படகுகளை ஏலம்விடப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு இனியும் ஒன்றிய அரசு மெளனம் காத்திருக்காமல் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, ஒன்றிய அரசிடம் உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism