Published:Updated:

`புட்டபர்த்தி சென்று திரும்பிய 21 பேர்!’ - பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் நீலகிரி


புட்டபர்த்தி சென்று திரும்பிய 21   பேர்
புட்டபர்த்தி சென்று திரும்பிய 21 பேர்

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சென்றுள்ளனர். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 3 மாதங்களாக அங்கேயே இருந்துள்ளனர். இ-பாஸ் பெற்று நேற்று குன்னூர் திரும்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை 13 ஆண்கள், 1 பெண் உட்பட 14 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர்‌ தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

ooty
ooty

5 பேர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் கோயம்பேடு சென்று திரும்பிய லாரி ஓட்டுநர்கள். ஒருவர் லாரி ஓட்டுநரின் சகோதரி. இவர்கள் குடியிருப்பு இருந்த பகுதிகள் முழுமையாக மூடப்பட்டு, இந்த நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த நபர்களைக் கண்காணித்து வருகின்றனர்.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்குச் சென்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் வெளியூர்களில் சிக்கித் தவித்த மக்கள் இ-பாஸ் மூலம் ஊர் திரும்புகின்றனர்.

ooty
ooty

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சென்று திரும்பிய 21 நபர்கள் குன்னூர் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள், ``நீலகிரி மாவட்டம் குன்னூர், முட்டிநாடு உள்ளிட்ட‌ பகுதிகளைச் சேர்ந்த 18 பெண்கள், 3 ஆண்கள் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சென்றுள்ளனர். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 3 மாதங்களாக அங்கேயே இருந்துள்ளனர்.

புட்டபர்த்தி சென்று திரும்பிய 21 பேர்
புட்டபர்த்தி சென்று திரும்பிய 21 பேர்

இ-பாஸ் பெற்று நேற்று குன்னூர் திரும்பினர். புட்டபர்த்தி சென்று திரும்பிய சிலருக்கு மற்ற பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். முடிவுகள் கிடைத்த பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைப்போம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு