தண்டவாளத்தில் மண் சரிவு: 2 ரயில்கள் ரத்து!

கன்னியாகுமரி: குமரி அருகே தண்டவாளத்தில் மண் சரிந்ததால் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்துக்கும் இடையே கொச்சுவேலி என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தில் இன்று அதிகாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக வந்த குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து குமரி-மும்பை ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், குமரி-திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!