விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது! | Tamil pandit, arrested in vijayatarani MLA slandered heaped!

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (15/11/2013)

கடைசி தொடர்பு:15:56 (15/11/2013)

விஜயதாரணி எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியதாக தமிழாசிரியர் கைது!

சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியை அவதூறாக பேசிய வழக்கில் தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி ஒரு தனியார் டி.வி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று நேயர்களுடன் பேசினார். அப்போது விஜய தாரணியிடம் போனில் பேசியவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது டி.வியில் நேரடியாக ஒளி பரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விஜயதாரணி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏ விஜயராணியை அவதூறாக போனில் பேசியது சென்னை மந்தைவெளியை சேர்ந்த தமிழ்தாசன் என்ற கஷ்மீர் ராஜ் (45) என்று தெரியவந்தது. எம்.ஏ.பி.எட் படித்துள்ள அவர் தமிழ் ஆசிரியர் ஆவார். சாந்தோம் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், யாழினி என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

இன்று காலை மந்தைவெளியில் உள்ள வீட்டில் வைத்து தமிழ்தாசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான தமிழ்தாசன் தமிழ் மீது தீவிர பற்று கொண்டவர். ம.தி.மு.க. அனுதாபி ஆவார். அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள  ஆர்.எஸ்.மங்கலம் ஆகும்.

குடிபோதையில் தெரியாமல் பேசிவிட்டதாகவும், தன்னை மன்னித்து விட்டு விடும் படியும் தமிழ்தாசன் காவல்துறையினரிடம் கூறினார். ஆனால் காவல்துறையினர் அதை ஏற்க மறுத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்