தமிழக அரசு சார்பில் அரிய தமிழ் நூல்கள் திரட்டும் பணி!

சென்னை: 17, 18, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்களை திரட்டும் பணி தமிழக தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடைபெறுகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''முதலமைச்சர் ஜெயலலிதாவால் 18&4&2012 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தமிழகத்தில் கிடைக்கப்பெறாத வெளிநாட்டு நூலகங்களில் உள்ள அரிய தமிழ் நூல்களை மின் எண்மத்தில் (Digitize) பதிவு செய்து நூலாக வெளியிடும் பணி ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ் வளர்ச்சித்துறையில், தமிழகத்தில் கிடைக்கப்பெறாத வெளிநாட்டு நூலகங்களில் உள்ள, அரிய தமிழ் நூல்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, 17, 18, 19&ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நூல்கள் பொதுமக்களாகிய தங்களிடம் ஏதேனும் இருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம் (முதல் தளம்), ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை&600008 என்ற முகவரியிலோ அல்லது 044&28190412, 2819013 என்ற தொலைபேசியிலோ தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!