வெளியிடப்பட்ட நேரம்: 07:39 (11/12/2013)

கடைசி தொடர்பு:07:39 (11/12/2013)

ஏற்காடு தேர்தலில் கருணாநிதி ஏன் பொது வேட்பாளரை நிறுத்தவில்லை: இல.கணேசன் கேள்வி!

சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் கருணாநிதி ஏன் பொதுவேட்பாளரை நிறுத்தவில்லை என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''ஏற்காடு தேர்தலில் பா.ஜனதா ஆதரவு கேட்டு கடிதம் எழுதியும், கடைசி வரை ஆதரவு கிடைக்கவில்லை என்று காங்கிரசையும், எங்களையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை கேட்டுவிட்டு அதன்பிறகு வேட்பாளரை அறிவித்து இருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும்.

மாறாக காங்கிரசையும், பா.ஜ.க.வையும் சமமாக பார்த்திருக்கிறார். அதேபோல நாங்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சமமாக பார்த்தோம்

கடற்படை தளபதிகளுக்காக நடைபெறும் பயிற்சி மற்றும் பட்டப்படிப்புகளுக்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை கடற்படை தளபதிகள் இந்தியாவிற்கு வந்து பயிற்சி மற்றும் பட்டப்படிப்புகள் பெறுவார்கள்.

இவ்வளவு பெரிய படுகொலை நடந்தும் கூட இலங்கைக்கு ராணுவ பயிற்சியோ, பட்டபடிப்பு படிக்க அனுமதியோ, நிதியோ தருவது தமிழனுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். ராஜபக்சே செய்த பாவத்தில் பாதியை இந்திய அரசு கட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழனுக்கு எதிரான முயற்சியில் உறுதுணையாக இந்திய அரசு இருக்கக்கூடாது.

4 மாநில தேர்தலில் மத்தியபிரதேசத்தில் அமோக வெற்றி கிடைத்துள்ளது. சத்தீஷ்காரிலும் கூட பா.ஜ.க. அதிகமான இடம் பெற்றிருக்கும். ஆனால் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பஸ்தார் பகுதியில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

டெல்லியிலும் கூட ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை பிரித்து விட்டதால் இந்த தொங்குநிலை ஏற்பட்டுள்ளது. ஊழல்கள் அல்லாத நாடாக்குவோம் என்று ஆம் ஆத்மி பிரசாரம் செய்யலாம். ஆனால் ஊழலற்ற ஆட்சிக்கு மோடியை முன்நிறுத்தி நாங்கள் வாக்குகள் கேட்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்