பண்ருட்டியார் ராஜினாமா: தே.மு.தி.க. செயற்குழு நாளை அவசர கூட்டம்!

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடக்கிறது என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தே.மு.தி.க.வில் 7 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இந்நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மேலும், தே.மு.தி.க.வில் அவர் வகித்து வந்த அவைத் தலைவர் பதவியையும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!