உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீதான குற்றச்சாட்டு மெமோ ரத்து! | Umashankar IAS Cancellation charges memo!

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (11/12/2013)

கடைசி தொடர்பு:18:14 (11/12/2013)

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். மீதான குற்றச்சாட்டு மெமோ ரத்து!

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான குற்றச்சாட்டு மெமோவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு டிட்கோ நிர்வாக இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் பணியாற்றினார். அப்போது டிட்கோ ஒப்பந்தம் செய்த நிறுவனத்தில் உமா சங்கரின் மனைவிக்கு வேலை கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு தமிழக அரசு குற்றச்சாட்டு மெமோ வழங்கி இருந்தது.

தமிழக அரசின் இந்த மெமோவை எதிர்த்து உமா சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் இந்தியப் பணிகள் நிர்வாக சீர்திருத்த சட்டப்பிரிவை ரத்து செய்யவும் உமாசங்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.

உமாசங்கரின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, உமா சங்கர் மீதான குற்றச்சாட்டு மெமோவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்தியப் பணிகள் நிர்வாக சீர்திருத்த சட்டப்பிரிவை ரத்து செய்ய முடியாது என்றும் தீர்ப்பளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்