வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (06/01/2014)

கடைசி தொடர்பு:15:13 (06/01/2014)

பொன்முடி, சுரேஷ் ராஜன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி!

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ் ராஜன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1996-2001 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துககு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி, சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

2006ஆம் ஆண்டு பொன்முடியையும், 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ராஜனையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், சொத்துக்குவிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணையில் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதனை மீறி இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 4 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கவும், சுரேஷ் ராஜன் மீதான வழக்கை கடலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்