Published:Updated:

லாட்டரி அதிபர் மார்டின், சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை

தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்டின் மற்றும் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்டின், சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது தொடர்பாக, அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்டினின் ரூபாய் 173 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது. மேலும், மார்டின் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிலம் மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியன் வங்கியிடம் கடன் வாங்கி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக, பண மோசடி தடுப்புச் சட்டம் 2002- ன் கீழ், 234.75 கோடி ரூபாய் மதிப்பிலான சரவணா கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!