தென்னை மரங்கள் கருகுவதை தடுக்க அரசு நடவடிக்கை இல்லை: விஜயகாந்த்

கோவை: போதிய தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்கள் கருகுகின்றன. இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''பொள்ளாச்சியில் அதிகமான தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பகுதியில் அதற்கான ஆராய்ச்சி மையம் தேவை. ஆனால், ஏற்கனவே, ஆட்சியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பொள்ளாச்சியில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கவில்லை

இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொப்பரைத் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் கருகுகின்றன. இதைப்பற்றியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலை மாறுவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!