கருணாநிதியை சுற்றியுள்ள சூழ்ச்சி கும்பலால்தான் எனக்கு இந்த நிலை: மு.க.அழகிரி | Karunanidhi mob surrounding maneuver has been removed: MK Alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (31/03/2014)

கடைசி தொடர்பு:15:30 (31/03/2014)

கருணாநிதியை சுற்றியுள்ள சூழ்ச்சி கும்பலால்தான் எனக்கு இந்த நிலை: மு.க.அழகிரி

நாமக்கல்: கருணாநிதியை சுற்றி சூழ்ச்சி கும்பல்தான் உள்ளது. அவர்களால்தான் எனக்கு இந்த நிலை என மு.க. அழகிரி வேதனையுடன் கூறினார்.

சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, இன்று நாமக்கல் வந்தார். அங்கு தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு:

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால், உங்களுக்கு ஆதரவாக இருந்திருப்பாரா?

அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல, தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

தி.மு.க.வில் இருந்து உங்களை ஏன் நீக்கினார்கள்?

தற்போது, தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல்தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?

தி.மு.க. 3வது இடத்துக்குத்தான் போகும்.

அப்படியானால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

எனக்கு ஜோசியம் தெரியாது.

தனிக்கட்சி தொடங்குவீர்களா?

தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்