யானை தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு | Elephants attack - Condolence and Relief in jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (02/04/2014)

கடைசி தொடர்பு:12:53 (02/04/2014)

யானை தாக்கி பலியான 2 பேர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:  கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி பலியான இரண்டு பேர் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "16.2.2014 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி வனச்சரகம், மங்களப்பாளையம் மேற்கு அருகே போலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்; 18.2.2014 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே ஜக்கார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவரின் மனைவி லட்சுமி ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானைகள் தாக்கியதில் அகால மரணமடைந்த மாணிக்கம், மற்றும் லட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்