குழந்தை சுஜித்தின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு | male child died in Tiruvannamalai Dist who fell in a borewell - Condolence and Relief

வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (17/04/2014)

கடைசி தொடர்பு:10:45 (17/04/2014)

குழந்தை சுஜித்தின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கிடாம்பாளையம் கிராமம், காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் 15.4.2014 அன்று தவறி விழுந்த கிடாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சுஜித் 16.4.2014 அன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்