தர்மபுரி அருகே ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை! | Rail passengers robbery in dharmapuri!

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (27/04/2014)

கடைசி தொடர்பு:13:26 (27/04/2014)

தர்மபுரி அருகே ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!

தர்மபுரி: தர்மபுரி அருகே காரவள்ளி என்ற இடத்தில் ஓடும் ரயிலில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல், பயணிகளிடம் இருந்து 17 சவரன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காலை 7 மணி அளவில் காரவள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலின் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நின்றது.
இதனையடுத்து, ரயில் பணியாளர்கள் குறிப்பிட்ட பெட்டிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது ரயில் நிறுத்தப்பட்டவுடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், 3 பெண்களிடம் இருந்து தங்க சங்கிலிகளை பறித்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

பவானி, மஞ்சு, சரஸ்வதி ஆகிய பெண்களிடம் இருந்து 17 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், சங்கிலிகளை பறிகொடுத்த பெண்கள் தர்மபுரி ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

அவர்கள் தர்மபுரி ரயில் நிலைய காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்