10ஆம் வகுப்பு தேர்வில் 19பேர் முதலிடம்; அரசு பள்ளி மாணவியும் சாதனை!

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 19 மாணவ, மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தி்ல் முதலிடம் பிடித்துள்ளனர். இதில் பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானுவும் இடம்பிடித்துள்ளது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி மாணவிகள் அக் ஷயா, தீப்தி, கிருத்திகா, மைவிதி, ரேவதி அபர்ணா, காவ்யா, ஸ்ரீவந்தனா, பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானு, தருமபுரி செந்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி தீப்தி, கயல்விதி, கள்ளக்குறிச்சி வெண்மதி மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா, பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் லக்கிரு,

மதுரை மாவட்டம், மேலூர் எஸ்.டி.எச்.ஜெயின் பள்ளி மாணவி சஞ்சனா, தருமபுரி விஜய் வித்யா பெண்கள் பள்ளி மாணவி சந்தியா, தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சந்தியா, சாத்தூர் ஆர்.கே.வி. மெட்ரிக் பள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா, விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்தினமணி, தென்காசி இலஞ்சி பாரத் பள்ளியை சேர்ந்த சுப்ரிதா, தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி வர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

முதலிடம் பெற்ற 19 பேரில் 18 பேர் மாணவிகள் ஆவர். ஒருவர் மட்டுமே மாணவன் ஆவார்.

மேலும், 498 மதிப்பெண்கள் பெற்று வேலூர் செயிண்ட் மேரீஸ் பள்ளி மாணவி எஸ்.ஹரினி உள்பட 125 பேர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

தூத்துக்குடி மாணவி

499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ள மாணவி சந்தியா, தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்தில் உள்ள அனிதா குமரன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை பரமசிவம் தொழிலபதிராக இருக்கிறார். தாயார் சைலஜா நர்சாக உள்ளார்.

தருமபுரி மாவட்டம் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 10 பேரில் 8 பேர் மாணவிகள் ஆவர். இந்த 8 மாணவிகளும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்  ஷயா, தீப்தி, காவியா, கிருத்திகா, மைவிழி, ரேவதி, சந்தியா, ஸ்ரீவந்தனா ஆகியோர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஆவர். தருமபுரி செந்தில் பள்ளியைச் சேர்ந்த கயல்விழி, தீப்தியும் முதலிடம் பிடித்தனர்.

 தேர்வு முடிவுகள் தொடர்பான இதர செய்திகளுக்கு கீழ்கண்ட தலைப்புகளை க்ளிக் செய்யவும்...


 10ஆம் வகுப்பு தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி!


அறிவியல் பாடத்தில் 69,560 மாணவர்கள் நூற்றுக்கு நூறு!


கடலூர் மாவட்ட 4 மாணவர்கள் மாநிலத்தின் 2ம் இடம் பிடித்தனர்!


தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்!
 

10ஆம் வகுப்பு தேர்வு: புதுச்சேரியில் 3 மாணவர்கள் முதலிடம்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!