வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (13/06/2014)

கடைசி தொடர்பு:13:37 (13/06/2014)

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பக்ருதீன் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை

சேலம்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பன்னா இஸ்மாயில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோருக்கு சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

சேலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வை சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பன்னா இஸ்மாயில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் பன்னா இஸ்மாயில், பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோருக்கு இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

மேலும், மூன்று பேரையும் வரும் 16ஆம் தேதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்