சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி! | One killed in explosion near Sivakasi fireworks factory!

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (25/06/2014)

கடைசி தொடர்பு:18:14 (25/06/2014)

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி!

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகாசி அருகேயுள்ள மாரனேரி, வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று (25ஆம் தேதி) மாலை பட்டாசுகளுக்கு மருந்து அடைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்  2 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஆலையில் உள்ள 6 அறைகளும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்