வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (01/07/2014)

கடைசி தொடர்பு:16:06 (01/07/2014)

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் திடீர் தீ!

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

3 வண்டிகளில் வந்த 18 தீ அணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, விமான நிலையத்தின் தரை தளத்தில் வைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் தீ பிடித்ததால்  அங்கு பெரும் புகை சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்நிலையில் மின் கலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரிய பாதிப்பு இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

விமான நிலைய தரைத்தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்